அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பாதீட்டில் நிறைவேற்றி உள்ளதா? ஹர்ஷ கேள்வி
அரசாங்கம் போகும் வழி தெரியாமல் குழம்பிப் போய் வழி மாறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கடந்த 48 வருடங்களாக நாடு செல்ல வேண்டிய பாதையில் செல்ல விடாமல் இடையூறு இப்போது அதே வழியில் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாதீடு தொடர்பான விவாதத்தின் போது அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“48 வருடங்களாக நாடு செல்ல வேண்டிய வழியை இடையூறு செய்து இப்போது அந்த வழியில் செல்ல வேண்டும் என்பது போன்று கூறும் கருத்து விதியின் விளையாட்டா? வழி எது என்பது இன்னும் அறியவில்லை. இன்னும் அந்த வழியைத் தேடுகின்றனர். வீதி மாறிவிட்டது. குழம்பிப்போயுள்ளார்கள்.
அதனால் 75 வருடங்களாக இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை நாசமாக்கினார்கள் எனக் கூறுவார்களாயின், இவர்களது மாற்றம் என்ன என்பது தொடர்பில் எங்களுக்குக் கூறுங்கள்.
தேர்தலுக்கு முன்னர் கூறியது பொய்யா? பொய்யைப் புரிதல் இன்றியா கூறினார்கள்? அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டார்களா? சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மாற்றம் செய்ய முடியாது என நாங்கள் தான் கூறினோம். இல்லை முடியும் என்று கூறினார்கள். முடியும் என உறுதியாகக் கூறினார்கள். எங்கே? புத்தகத்திலும் எழுதினார்கள்.
கொஞ்சம் மக்கள் கேட்கும் கேள்விகளையும் பார்ப்போம். அது தானே முக்கியம். வாழ்க்கை செலவைக் குறைத்தல், சம்பளம் அதிகரிக்கப்படும், வருமான வரி குறைக்கப்படும், ஜப்பான் உந்துருளி கொண்டு வர வாய்ப்பு வழங்கப்படும், ஒரு கிலோ நெல்லுக்கு 140 ரூபாய் வழங்கப்படும், எனக் கூறப்பட்டது. ஆனால் இந்த பாதீட்டில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார்.
