Main Menu

மன்னார் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
பறயநாலங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த உந்துருளியொன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உந்துருளியை செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அதில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...