அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை வேறு நாடுகளுக்கு வழங்கும் எண்ணம் இல்லை – இராமலிங்கம் சந்திரசேகர்
அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
