Main Menu

அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார்.

வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.

பகிரவும்...
0Shares