Main Menu

துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரொட்டும்ப உபாலியை” தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

சர்வதேச பொலிஸாரால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட நாடகந்தகே உபாலி எனப்படும் “ரொட்டும்ப உபாலியை” 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

39 வயதுடைய இவர் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் நபரொருவரை வெட்டிக் கொலை செய்தல், 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மாவரல பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச  பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த “ரொட்டும்ப உபாலி” , கந்தகம தெனியே கெதர பிரதீப் கந்தருவன் எனப்படும் , “கொலன்னாவை சந்தன” மற்றும் ரன்முனி மஹேஷ் ஹேமன்த சில்வா ஆகியோர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை (07) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில், “ரொட்டும்ப உபாலியை” 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தவும், “கொலன்னாவை சந்தன” என்பவரை 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தவும் மாத்தறை நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

மூன்றாவது சந்தேக நபரான ரன்முனி மஹேஷ் ஹேமன்த சில்வா என்பவர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பகிரவும்...