இந்திய உயர் ஸ்தானிகருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்-களுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை வலியுறுத்தினோம் எனத் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய தரப்பில் உயர்ஸ்தானிகருடன் , அரசியல் துறை இரண்டாம் செயலாளர் அசோக் குமாரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.