Main Menu

HMPV வைரஸ் புதிய வைரஸ் அல்ல – சுகாதாரத்துறை விளக்கம்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் 20 ஆண்டுகளாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இலங்கையில் இவ்வருடம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், கடந்த வருடம் கண்டி மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டறியப்பட்டதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...
0Shares