Main Menu

கண்டியில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ; மூவர் கைது

கண்டி பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அநுராதபுரம், மீகலேவ மற்றும் ஹுரிகஸ்வெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து, போலியாகத் தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் ,பிறப்பு சான்றிதழ்கள் , தேசிய அடையாள அட்டைகள், கல்வி சான்றிதழ்கள், காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரும் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போலி ஆவணங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares