Main Menu

வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தவறியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.
கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டுபிடிக்கச் சர்வதேசம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாலும், இதுவரையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.
பகிரவும்...
0Shares