கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அமைதியின்மை – அர்ச்சுனா எம்.பி, தம்பிராசா இடையில் கருத்து மோதல்

கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த சகாதேவன், நாடாளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என்று கூறினார்.
அதற்குப் பதிலளித்த அர்ச்சுனா எம்,பி shut up (வாயை மூடுங்கள்) என்று கூறினார்.
இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் எனவும் சரியான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்துமாறும் தெரிவித்தார்.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கும், தம்பிராசாவிற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
பகிரவும்...