சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு ஹெக்டயருக்கு தலா ஒரு இலட்சம் இழப்பீட்டை வழங்க தீர்மானத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.