Main Menu

நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்

அம்பேத்கர் தொடர்பாக அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்வரும் மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாளை முதல் 3 நாள்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள தொடர் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அறிவிப்பை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பேத்கர் குறித்து அமித் ஷா தெரிவித்த கருத்துக்கள் தவறுதலாக வெளிவரவில்லை எனவும் தவறுதலாக கூறியிருந்தால் அவர் மன்னிப்புக் கேட்டிருப்பார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது
பகிரவும்...