சீரற்ற காலநிலை – வவுனியா ஏ9 வீதி முடக்கம்

வவுனியா ஏ9 வீதியில் சீரற்ற காலநிலை காரணமாகப் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில், ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிற்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் – கொழும்பு பிரதான வீதியின், புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பகிரவும்...