மழை, வெள்ளம்! – திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்கள், 4851 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை, வெள்ளம் காரணமாக 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, 532 குடும்பங்களைச் சேர்ந்த 1,621 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 06 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
பகிரவும்...