Main Menu

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலிருந்து எச்.எம்.எம். ஹரீஸ் நீக்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து  இடைநிறுத்தப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் கட்சித் தலைவரையும் விமர்சித்து கருத்து வெளியிட்டதால் அவர் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இந்த பதவி நீக்கம் தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

பகிரவும்...
0Shares