Main Menu

ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இதன்போது சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பகிரவும்...
0Shares