Main Menu

விகிதாசார தேர்தல்களின் கீழ் இது ஒரு வரலாற்று வெற்றி – டில்வின் சில்வா

விகிதாசாரத் தேர்தலின் கீழ் இது ஒரு வரலாற்று வெற்றி எனத் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெற்றியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், வெற்றிக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாத வடமாகாண மக்கள், இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி முன்னேறிச் சென்றுள்ளனர்.
மக்கள் வழங்கிய அதிகாரத்தில், மூன்றில் இரண்டு பங்கு நாங்கள் கேட்காத போது, அது எமக்கு வழங்கப்பட்டதாகவும், மக்கள் வழங்கிய பெரும்பான்மையான அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக அர்ப்பணித்து மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்போம்  எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
பகிரவும்...