அமைதியான, ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு ஜப்பான் தூதுவர் வாழ்த்து
அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...