Main Menu

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும்

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (14) தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவடையும். முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.

10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு, 17,140,354 நபர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பகிரவும்...
0Shares