பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்ற மாட்டார். மிகக் குறுகிய அமைச்சரவையின் ஊடாக நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால் லண்டனிலுள்ள இலங்கை தூதுக்குழுவை குறித்த மாநாட்டில் பங்கேற்றச் செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வியாழக்கிழமை 24 தொடக்கம் 26ஆம் திகதி வரை சமோவா அபியாவல் ‘சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம்: ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.
அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்ளச் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.
பகிரவும்...