Main Menu

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறும் வங்கிகளின் கிளைகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது பல வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
டஹிஹே மாவட்டத்தில் ஹெஸ்பொல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மற்றும் பீக்கா பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று (21) காலை வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த தாக்குதலால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள 14 பகுதிகள் உட்பட லெபனானில் 25 பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தவுள்ளதாக முன்னதாக எச்சரித்திருந்தது.
இதனையடுத்து குறித்த பகுதிகளில் வசித்து வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...