முன்னாள் அமைச்சரின் உறவினரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடம்பர கார்கள் மீட்பு

முன்னாள் அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தனவின் உறவினரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடம்பர வாகனங்களை கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அனிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் பெறுமதியான பிஎம்டபில்யூ மற்றும் எஸ்யுவி ரகவாகனத்தையும் கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
குறிப்பிட்ட வீட்டில் வாகத்தரிப்பிடமொன்றை சோதனையிட்டவேளை இந்த வாகனங்களை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வாகனங்களிற்கு எவரும் உரிமை கோரவில்லை என்பதால் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டின் உரிமையாளர் கண்டியில் வாகனவிற்பனையில் ஈடுபட்டுள்ளார், ரோகித அபயகுணவர்த்தன துறைமுகங்கள் விவகாரத்திற்கான அமைச்சராக பணியாற்றியவேளை இவர் துறைமுக அதிகாரசபையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரண்டு வாகனங்களையும் துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் இரண்டு வாகனங்களையும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பகிரவும்...