Main Menu

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க மீண்டும் சூழ்ச்சி – ஜெயசிறில்

போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீட்டு சின்னத்தை சிதைக்க அரசியல் ரீதியாக பல செயற்பாடுகளை முன்னெடுப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமாகிய கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.

காரைதீவில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (13)  இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீட்டு சின்னத்தை எந்த காலத்திலும் யாராலும் மறைக்க முடியாது .   வடகிழக்கு தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு தாய் கட்சி தமிழரசு கட்சிதான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கப்பல் சின்னத்தில் ஒருவர் வந்து மக்களை மூளைச்சலவை செய்து முப்பதாயிரம் வாக்குகளை வீணடித்தார் இதனால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் இழந்து அரசியல் அநாதையாக்கப்பட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழரசுக் கட்சி தேசிய பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியது. இம்முறை பொதுத் தேர்தலில் மாற்று கட்சிகள் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்த பல பிரயத்தனங்களை மேற்கொண்ட போது எம்முடன் இணைய பலர் விண்ணப்பித்தனர்.

இந் நிலையில் மக்கள் செல்வாக்குள்ள மக்களுக்கு பக்கச்சார்பின்றி சேவை வழங்க கூடிய இளைஞர்களுக்கு தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் இடம் வழங்கியுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதி மாற்று இனத்தவருக்கு இனத்தவருக்கு கிடைத்த வரலாற்றை நாம் சிந்திக்க வேண்டும்.

இம் முறையும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து பிரயோசனம் இல்லாமல் செய்ய மீண்டும் ஒருவர் படகில் வருகின்றார்.

தேசிய பட்டியலுக்காக தமிழ் மக்களது வாக்குகளை பிரித்து கட்சிகளுக்கு வழங்க அரசியல் ரீதியான நடவடிக்கை இடம் பெறுவதாகவும் மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

பகிரவும்...
0Shares