Main Menu

தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நேற்று அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 12 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குடும்ப நிகழ்ச்சியொன்றின் போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...
0Shares