நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பொது கட்டமைப்பு சார்பில் போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் இன்று

தமிழ்ப் பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பினர் உள்ளிட்டோர் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியிருந்தனர். இந்தநிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...