Main Menu

நவம்பர் 14 பாராளுமன்றத் தேர்தல்

பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாராளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.இதனை அடுத்து நவம்பர் 14 ஆம்  திகதி தேர்தல் நடத்தப்படுவதுடன், நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் கூடும்.

பகிரவும்...