Main Menu

பொதுக் கூட்டங்களை ரத்து செய்த போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல்  இருப்பதால் அவர் ஓய்வெடுப்பதற்காக இன்று பொதுக்கூட்டங்களை ரத்து செய்திருக்கிறார்.அந்தத் தகவலை வத்திகன் அலுவலகம் வெளியிட்டது.”போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல் உள்ளது. அவர் அடுத்த சில நாள்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதனைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்று வத்திகன் அலுவலகம் தெரிவித்தது. போப் பிரான்சிஸ் வரும் வியாழக்கிழமை (26 செப்டம்பர்) பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், போப் பிரான்சிஸ் இம்மாதம் (செப்டம்பர் 2024) இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, திமோர் லெஸ்ட்டே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் பயணம் மேற்கொண்டார்.

பகிரவும்...