முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகலாம் – தேர்தல் ஆணைக்குழு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவு இன்று சனிக்கிழமை (21) நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.முதலில் தபால் மூல வாக்கு முடிவுகளா அல்லது பதிவு வாக்கு முடிவுகளா வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.எவ்வாறாயினும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இன்று நள்ளிரவில் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமானதுடன் 4 மணிளவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...