Main Menu

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதியம் 12.00 வரை 23.36 சதவீதம் வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 442 வாக்கெடுப்பு நிலையங்களிலும் மதியம் 12.00 வரையிலும் 105,054 (23.36%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார்.இதனடிப்படையில், கல்குடா தொகுதியில் 28,668 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 55,089 வாக்குகளும், பற்று தேர்தல் தொகுதியில் 21,297 வாக்குகளும் அளிக்கப்பட்டடுள்ளன. இவற்றில் அதிகளவு மக்கள் வாக்களித்த தொகுதியாக மட்டக்களப்பு தேர்தல் தொகுதி காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பகிரவும்...