திருகோணமலை மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 51.7 வீதமான வாக்குகள் பதிவு
திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 51.7 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 155,713 பேர் பகல் 12 மணி வரை வாக்களித்துள்ளனர். இது 51.7 வீதமாகும்.குறிப்பாக, சேருவில தேர்தல் தொகுதியில் 44,871 (55.9 வீதம்) வாக்குகளும், திருகோணமலை தேர்தல் தொகுதியில் 46,268 (45.6 வீதம்) வாக்குகளும், மூதூர் தேர்தல் தொகுதியில் 64,574 (54.2 வீதம்) வாக்குகளும் பகல் 12 மணி வரை செலுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் 30.4 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ள சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள 318 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் தமது வாக்குகளை செலுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் திருகோணமலை நகரத்தை பொறுத்தவரையில் காலையில் சில வாக்களிப்பு நிலையங்களில் மாத்திரம் பெருமளவான மக்கள் வாக்களித்ததை காணக்கிடைத்தது.அத்துடன் வயோதிபர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வாக்களிப்பில் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
பகிரவும்...