Main Menu

மியன்மாரில் புயலால் 226 பேர் மரணம்

மியன்மாரைக் கடந்துசென்ற யாகி புயலில் குறைந்தது 226 பேர் மாண்டனர்.மேலும் 77 பேரைக் காணவில்லை.நேற்று (16 செப்டம்பர்) பதிவான எண்ணிக்கையைப் போல் அது இரண்டு மடங்கு.புயலால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பெருஞ்சேதத்தாலும் கிட்டத்தட்ட 630,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.வியட்நாம், லாவோஸ், தாய்லந்து, மியன்மார் ஆகியவற்றில் யாகி புயல் கனத்த மழை, பெரு வெள்ளம், நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது.நான்கு நாடுகளிலும் மொத்தம் 500 பேருக்கு மேல் பலியானதாகக் கணிக்கப்படுகிறது.

பகிரவும்...
0Shares