காஸா போரால் சிறார்கள் இறந்ததற்கு போப் பிரான்ஸிஸ் கண்டனம்

காஸா போரால் சிறார்கள் இறந்ததற்கு கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்ஸிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமரசப் பேச்சில் முன்னேற்றம் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் அவர் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து ரோமுக்குச் சென்றுகொண்டிருந்தபோது போப் பிரான்ஸிஸ் செய்தியாளர்களிடம் பேசினார். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் செய்தியாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியும் போப் பேசினார். முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியேற்றத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும் துணையதிபர் கமலா ஹாரிஸின் கருக்கலைப்புக் கொள்கையையும் அவர் குறைகூறினார். கத்தோலிக்கர்கள் அதிகம் உள்ள திமோர் லெஸ்ட்டேயில் (Timor-Leste) தலைவர்கள் இளையர்களை அனைத்துவிதமான துன்புறுத்தலில் இருந்தும் பாதுகாக்கவேண்டும் என்று போப் பிரான்ஸிஸ் கேட்டுக்கொண்டார். சீனாவில் கத்தோலிக்க ஆயர்களை நியமிப்பதற்கான உடன்பாட்டை வத்திகன் அடுத்த மாதம் புதுப்பிக்கவிருப்பதாக அவர் சொன்னார். போப் பிரான்ஸிஸ் இம்மாதக் கடைசியில் பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றுக்குச் செல்லவிருக்கிறார்.
பகிரவும்...