Main Menu

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மலர்தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், எக்ஸ் தளப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததார் 75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares