Main Menu

தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் முதல் நாள் நினைவஞ்சலி ஆரம்பமாகியது. நல்லூர் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில், தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு மாவீரர் றொஷானின் தாயார் இரத்தினசிங்கம் பொற்கொடிஅவர்களால் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares