Main Menu

ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்தும் சீனா

சீனா, வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தவிருக்கிறது.ஊழியரணி நலிவடைந்து வருவதைச் சமாளிக்க அந்த முடிவு எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.ஆண்களின் வேலை ஓய்வு வயது 60லிருந்து 63க்கு உயர்த்தப்படும். தொழில்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வேலை ஓய்வு வயது 50லிருந்து 55க்கு உயரும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அது 55இலிருந்து 58க்கு அதிகரிக்கப்படும்.அதிகாரபூர்வ வேலை ஓய்வு வயதுக்கு முன்பு, வேலையிலிருந்து ஓய்வுபெற அனுமதி வழங்ககப்படமாட்டாது.உலகிலேயே ஆக இளம் வேலை ஓய்வு வயதைக்கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று.குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் சராசரி ஆயுட்காலம், மூப்படையும் மக்கள்தொகை ஆகியவை அதன் ஊழியரணியைப் பாதித்திருக்கின்றன.

பகிரவும்...
0Shares