Main Menu

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ளது.இதனால், தேர்தல் பிரச்சாரங்கள் பரீட்சைகளுக்கு இடையூறை விளைவிக்கலாம். எனவே, நாளைய தினம் காலை பரீட்சை நிலையங்களுக்கு அருகில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாளையதினம் 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெறவுள்ளது. இவ் ஆண்டு 320,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares