Main Menu

தமிழ்நாட்டில் இதுவரை வெளியான வாக்குகளின் படி வாக்கு சதவீதம்

,தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்கிற போதிலும் வாக்கு சதவீதத்தில் இரட்டை இலக்கத்தை தாண்டி உள்ளது. அதிமுக வாக்கில் பாதி அளவிற்கு பாஜக எடுத்துள்ளது. இதுவரை வெளியான வாக்குகளின் படி தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை வாக்கு சதவீதம் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதேநேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இந்த முன்னிலை நிலவரமும் இப்போது வரை மாறி மாறி வருகிறது. சௌமியா அன்புமணி 261726 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர் மணி 256828 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் அசோகன் 179410 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடம் பிடித்துள்ள சௌமியா அன்புமணிக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள மணிக்கும் இடையே 4898 வாக்குகள் தான் வித்தியாசம். அதேநேரம் இருவரும் மாறிமாறி முன்னிலை வகிப்பதால் முடிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதே எதார்த்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வெளியான வாக்குகளின் படி, பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.. அதேநேரம் வாக்கு சதவீதம் என்பது இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. பாஜக 20 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளுடன் 10.54 சதவீதம் வாக்குகளை பெற்று 4வது பெரிய கட்சி என்கிற நிலையை பிடித்துள்ளது. காங்கிரஸ கட்சிக்கும் பாஜகவிற்கும் வெறும் 0.33 சதவீதம் தான் வித்தியாசம் ஆகும். காங்கிரஸ் கட்சி 10.91 சதவீதம் வாக்குகள் பெற்று போட்டியிட்ட 9 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் சுமார் 21 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் வரவில்லை.. அனைத்து இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. சுமார் 40 லட்சம் வாக்குகளுடன் 20.36 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. அதேநேரம் திமுகவை பொறுத்தவரை சுமார் 51 லட்சம் வாக்குகளுடன் 25.94 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. திமுக போட்டியிட்ட 22 ல் 21 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. தேமுதிக 3.19 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஒரு இடத்தில் (விருதுநகரில்) முன்னிலையில் இருந்தது. ஆனால் கடும் போட்டி காரணமாக அங்கு தற்போது காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகிக்கிறார்.

நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் எத்தனை சதவீதம் வாக்குகள் வாங்கியது என்பது தெரியவில்லை. ஒட்டமொத்தமாக கட்சிகள் அல்லாதவர்கள் தமிழகத்தில் 21 சதவீதம் வாக்குகள் வாங்கி உள்ளனர். இதில் தான் நாம் தமிழர் கட்சி வாக்குசதவீதமும் இருக்கிறது.

பகிரவும்...
0Shares