Main Menu

மீண்டும் கூட்டணிகளுடன் ஆட்சியமைக்கும் பாஜக?

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு முடிவுகளின்படி பாரதிய ஜனதாக்கட்சி தனித்து 235 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி தனித்து 94 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

அந்த வகையில் 18ஆவது மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும், தனிப்பெரும்பான்மைக்கான 272 இடங்களைப் பெறவில்லை.

இந்தநிலையில் பாரதிய ஜனதாக்கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

நாடு முழுவதும் 543 தொகுதிகளில் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.

இதன்போது அளிக்கப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.  

பகிரவும்...
0Shares