Main Menu

பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் – ராகுல் வலியுறுத்து

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல், பிரதமர், துணை குடியரசுத் தலைவருக்கு மாளிகை கட்டுதல் உள்ளிட்ட செயல் திட்டமான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

அதற்கு பயன்படுத்தும் நிதியை நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.

எண்ணில் அடங்காத உடல்கள் ஆற்றில் செல்கின்றன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் மைல் கணக்கில் வரிசையில் நிற்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் உண்மை நிலைமையை அறியாததுபோல செயல்படுகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...