Main Menu

உள்ளிருப்புக் காலம் ஆறு வாரங்கள் நீட்டிக்க கோரிக்கை

உள்ளிருப்புக் காலமானது (CONFINEMENT) ஆகக்குறைந்தது ஆறுவாரங்களிற்குத் தொடரவேண்டும் எனப் பிரான்சின் Covid-19 விஞ்ஞான ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, ஜனதிபதியும் பிரதமரும், உள்ளிருப்புக் காலம் தொடர்பாக இவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளிருப்புக்காலம் ஆரம்பித்த 17 மார்ச் இலிருந்து மொத்தமாக ஆறு வாரங்கள் தொடரவேண்டும் என்றும், உள்ளிருப்புச் சட்டத்தினை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும், இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

பிரான்சில் நேற்று வரை 20.000 பேர் தொற்றிற்கு உள்ளாகியும், 860 பேர் சாவடைந்தும் உள்ள நிலையில்,இந்தக் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...