8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் (25/03/2025)

தாயகத்தில் உரும்பிராயை பிறப்பிடமாகவும்,தாவடி கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் அவர்களின் 8 வது நினைவு தினம் 25ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் அவர்களை அன்பு மனைவி விஜயலட்சுமி (கனடா) அன்புப்பிள்ளைகள் அருந்ததி (ஜேர்மனி) தயாநிதி (கனடா) ரவிச்சந்திரன் (கனடா) பஞ்சநிதி (கனடா) மருமக்கள் கஜேந்திரன் (ஜேர்மனி) ஞானேஸ்வரன் (கனடா) முரளி (கனடா) நிரோஜா(கனடா) கிரி (கனடா) பேரப்பிள்ளைகள் ஆர்த்திகா, பவித்திரா, சஞ்சுதன் (ஜேர்மனி) ரிஷா, டிரிஷா, சாஜி, சஜித், சகானா, பிரவீனா, பிரசாந், சிபி, விது(கனடா) பூட்டப்பிள்ளைகள் லீயான், இனியா, யாதவன், கைரா, மற்றும் சகோதரர்கள் மதுரநாயகி (தாயகம்) குணநாயகி (TRTஅன்பு நேயர் பிரான்ஸ்) ஜெனநாயகி (பிரான்ஸ்) செல்வநாயகி (டென்மார்க்) வதனா (TRT அன்பு நேயர் பிரான்ஸ்) மற்றும் மச்சான்மார், மச்சாள்மார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.
எட்டு வருடங்கள் என்ன எண்பது வருடங்கள் ஆனாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களை விட்டகலாதப்பா!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
இன்றைய தினம் 8வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் திரு சண்முகம் பத்மநாதன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அவர்களுடன் இணைந்து நினைவு கூருகின்றோம்.
இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி விஜயலட்சுமி, அன்பு பிள்ளைகள் அருந்ததி, தயாநிதி, ரவிச்சந்திரன் , பஞ்சநிதி.
அவர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றி.
பகிரவும்...