60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.மார்க்கண்டு நிமலசிங்கம்

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசிப்பவருமாகிய மார்க்கண்டு நிமலசிங்கம் (TRTஅன்பு நேயர்) அவர்கள் 03ம் திகதி ஐப்பசி மாதம் வியாழக்கிழமை தனது 60 வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் திரு. மார்க்கண்டு நிமல சிங்கம் அவர்களை அன்பு மனைவி சுபாசினி மற்றும் சகோதர, சகோதரிகள், உற்றார் , உறவினர், நண்பர் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் திரு மார்க்கண்டு நிமலசிங்கத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் சகல செல்வங்களோடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அவரது அன்பு மனைவி சுபாசினி.
அவர்களுக்கும் எமது நன்றி.