58 பாதாள குழுக்களும் அதனுடன் தொடர்புபட்ட 1400 குற்றவாளிகளும்

இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயற்படுகின்றன. அந்தக் குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர்வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22/2/2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் 5 கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் இருந்தே பாதாளக் குழுக்களை வழிநடத்துகின்றனர். வெளிநாடுகளில் உள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்கின்றது. பாதாளக் குழுக்களுக்குத் தற்போது அரசியல் பாதுகாப்பு கிடைப்பதில்லை. பாதாள குழுக்களுக்கு பாதுகாப்புத் தரப்பிலுள்ள சிலரது ஒத்துழைப்பு நேரடியாக, மறைமுகமாக கிடைக்கப்பெறுகின்றது. அத்தகைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாகப் புழங்கும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுவருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பகிரவும்...