Main Menu

50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. ரதி ஜெயக்குமார் (16/11/2024)

ஸ்கொட்லாண்ட் கிளாஸ்கோ (Scotland -Glasgow ) நகரில் வசித்து வரும் திருமதி ரதி ஜெயக்குமார் 15ம்திகதி கார்த்திகை மாதம் நேற்று வந்த தனது 50வது பிறந்த நாளை இன்று தனது இல்லத்தில் அன்புக் கணவர் ஜெயக்குமார், அன்புச்செல்ல பிள்ளைகள் அனோஜா, அபிஷா, ஜெனதன், ஆருயுர் தோழி (Paris) விமலா பால முருகனுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி ரதி ஜெயக்குமார் அவர்களை அன்புக்கணவர் ஜெயக்குமார், அன்புப் பிள்ளைகள் அனோஜா , அபிஷா, ஜெனதன், மற்றும் இத்தாலி ஜெனோவா நகரில் வசிக்கும் அன்பு அண்ணா சந்திரபாதம் குடும்பத்தினர், தாயகத்தில் மானிப்பாயில் வசிக்கும் இராசபாதம் அண்ணா குடும்பத்தினர் , தயா லோகநாதன் குடும்பத்தினர், கிளிநொச்சியில் வசிக்கும் நாக பாதம் அண்ணா குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் சூரியபாதம் அண்ணா குடும்பத்தினர், இலங்கை களுத்துறையில் வசிக்கும் அன்பு சறோ மச்சாள் குடும்பத்தினர் , கொழும்பில் வசிக்கும் அன்பு மாமி, விஜி மச்சாள் குடும்பம் , ராஜன் அண்ணா குடும்பத்தினர், பரிசில் வசிக்கும் அன்பு மச்சாள் லீலா, ரவி மகன் றுக்சன், மாமாமார்,மச்சாள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் திருமதி ரதி ஜெயக்குமார் இன்று போல் என்றும் குல தெய்வம் கண்ணகி அம்மன் அருள் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் திருமதி ரதி ஜெயக்குமாரை பல்லாண்டு காலம் வாழ்கவென TRT தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புத்தோழி Paris இல் வசிக்கும் விமலா பால முருகன் தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றி.

பகிரவும்...
0Shares