31ம்நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனை – அமரர். செல்லையா தியாகராஜா (29/10/2025)
தாயகத்தில் யாழ்/ வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் France Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 29ம் திகதி அக்டோபர் மாதம் புதன்கிழமை இன்று தங்களது இல்லத்தில் அனுஷ்டிக்கின்றார்கள்.
அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையை அனுஷ்டிப்போர் அன்பு மனைவி சகுந்தலா, அன்பு சகோதரங்கள் தேவராஜா ஆனந்தம் (ஆனந்தா ஸ்ரோர் உரிமையாளர் -காலி) விமலாதேவி-பிரான்ஸ்,வரதராஜா-பிரான்ஸ், குணராஜா-பிரான்ஸ், செல்வராஜா (லோகு) பிரான்ஸ், சந்தானலட்சுமி-பிரான்ஸ், அன்பு மைத்துனர்மார் ரகுநாதன்-( ரகு, தமிழ் ஒலி வானொலி பிரான்ஸ் அறிவிப்பாளர்) கமலநாதன், கமல குமாரி, மாலதி, ரவிச்சந்திரன் அருட்செல்வன் ஜெயவதி, தயாநிதி, திலகராணி மற்றும் உடன்பிறவாத சகோதரங்கள் சந்திரகலா (கலா) பிறின்சி, செந்தமிழ்செல்வி, நாதன், வசந்தமாலா-பிரான்ஸ் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் பங்கேற்று இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்.
இன்று நடைபெறும் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ரகு-கலா மற்றும் சகோதரங்கள்.
அனைவருக்கும் நன்றி
மனைவி புலம்பல்
என் அன்பானவரே
என்னைக் காதலித்து கை பிடித்த நாள் முதல்
என்னை கண் கலங்க விட்டதில்லை.
தலை சிறந்த கணவனாக, ஆசானாக, நண்பனாக,
தக்க நேரத்தில் அறிவுரை வழங்கி பல வருடங்கள்
இனிதே வழி காட்டி வழித்துணையாக வந்தவரே!
உங்கள் அன்பு பிணைப்பால் அரவணைத்து
சகல சந்தோஷங்களிலும், துக்கங்களிலும் சம பங்கேற்று –
இருவரும் ஒருவராக சுற்றியுள்ள எல்லோரையும்
உயர வைத்து அழகு பார்த்தவரே!
நாடி வந்த சுற்றத்தார், நண்பர்கள் அனைவரையும்
அன்புடன் அரவணைத்து உதவி செய்தீர்கள்
பொதுப்பணியில் ஈடுபட்டு மன நிறைவு கண்டீர்கள்
குறைகளையும் நிறைகளாக்கி வாழும் வரம் பெற்றவரே
இன்று ஒரு நொடியில் என்னை தவிக்கவிட்டு சென்றதேனோ?
தனிமரமாய் தவித்து இங்கு நானிருந்து கலங்குகின்றேன்
ஆதரவாய் அணைத்து என்னை தேற்றி விட மாட்டீரோ!
******************************************************
எங்கள் சோர்வுகளில் நம்பிக்கையாய் இருந்தீர்கள்
இன்று உடலில் எங்களுடன் இல்லாது விட்டாலும்
உங்கள் மனித பண்புகள், நேர்மை, நேர்த்தி, கல்வி
எங்கள் வாழ்க்கையின் அடித்தளங்களாகவே உள்ளன
நாங்கள் துயரப்படவில்லை,ஏன் என்றால்
நீங்கள் எங்களுக்கு தந்தது வலிமை
நீங்கள் எங்களுக்கு கற்று கொடுத்து தன்னம்பிக்கையையும் , தைரியத்தையும் எப்படி வாழ்வாக மாற்றுவது என்பதை
நீங்கள் எங்களுக்கு ஒரு சக்தியையும் கொடுத்தீர்கள் எத்தனை சிரமங்கள் வந்தாலும் ஒன்றாகவும் உறுதியாகவும் நிற்கும் தைரியத்தை
நாங்கள் உங்களை இழந்தோம் என்று இல்லை, உங்களால் நாங்கள் நிறைவடைந்தோம்
நீங்கள் எங்கள் இதயங்களில் என்றுமே இருப்பீர்கள் அன்பின் ஒளியாக வழி காட்டும் தீபமாக
அன்புடன் உங்கள் குழந்தைகள்

