Main Menu

2035 முதல் எரிபொருள் வாகனங்களுக்கு தடை எனும் திட்டம் கைவிடப்பட்டது – ஐரோபிய ஒன்றியம்

பெற்றோல், டீசலில் இயங்கும் மகிழுந்துகளுக்கு வரும் 2035 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐரோபிய ஒன்றியம் அறிவித்திருந்தது. தற்போது அதனைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. தடைக்கு பதிலாக, மிக இறுக்கமான கட்டுப்பாட்டும் நிபந்தனைகளும் விதிக்கப்படும் எனவும், 2035 ஆம் ஆண்டுக்குள் தனியே மின்சார மகிழுந்துகள் என்பது சாத்தியம் குறைந்த ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தனி எரிபொருளில் இயங்கும் மற்றும் எரிபொருள் – மின்சாரம் என இரண்டும் கலந்த ஹைபிரிட் இயந்திரங்கள் கொண்ட மகிழுந்துகள் அனைத்துக்கும் 2035 ஆம் ஆண்டுமுதல் தடைவிதிப்பது பல்வேறு கூட்டு காரணங்களினால் சாத்தியமற்றுப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஐரோப்பிய மின்கலன் துறைக்கு 1.5 பில்லியன் யூரோக்கள் வழங்க உள்ளதாகவும், சீனாவை நம்பி இருப்பதை குறைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...