Day: September 22, 2026
சுரேஷ் சலேவை 28ஆம் திகதி வரை மருத்துவமனையில் வைத்திருக்க பரிந்துரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சையளிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான இடம் அல்ல என்று அவர் வாதிட்டுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதாரம் 3.4 டிரில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
பொலிஸ் தடையை மீறி சென்ற காரை வழிமறித்த பொலிஸார்

கிரிவுல்லவில் பொலிஸாரால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்ட நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்று பன்னல நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அந்த காரை செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிரிவுல்லமேலும் படிக்க...
தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் – சஜித் பிரேமதாச

இனம், மதம், மாகாணம், மாவட்டம், கிராமம் மற்றும் நகரம் எனப் பிரிந்து நிற்காமல் இலங்கையர்களாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும். இந்நடவடிக்கையில் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமான ஒரு விடயமாகும். சாதி மற்றும் மத பேதங்களின்றி மனிதநேயத்தைமேலும் படிக்க...
அனோஜனுக்காக பாராளுமன்ற விசேட தூதுக்குழு சவூதிக்கு- விஜித

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பைமேலும் படிக்க...
22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்

அரசியலமைப்புக்கான 22-வது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை இலங்கையின் அரசியலமைப்புக்கு இணங்கவே உள்ளன என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அறிவித்த சபாநாயகர்,மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு

இலங்கையின் வரலாற்றிலேயே பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலான 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது. இதற்காக கொழும்பு, அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் சிறப்புப் பாதுகாப்புமேலும் படிக்க...
