Day: July 14, 2026
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும்போது,மேலும் படிக்க...
இயக்குநர் அவதாரத்தைத் தொடர்ந்து நடிகராகும் ஜேசன் சஞ்சய்?

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், அடுத்ததாக நடிகராகத் திரையில் தோன்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் அவதாரத்திற்குப் பிறகு, தந்தை விஜய்யைப் போலவே ஜேசன் சஞ்சய் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளார்.மேலும் படிக்க...
மிக உயரிய விருதான ஞானபீடம் வென்ற கவிஞர் வைரமுத்து

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய விருதான ‘ஞானபீட’ விருது, கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டது. ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் இந்த விருதை வழங்கி கௌரவித்தார். கடந்த 25 ஆண்டுகளில்மேலும் படிக்க...
முதல் முறையாக 25 டிரில்லியன் யுவானைத் தாண்டியது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம்

இந்த ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் உகந்த அளவில் உள்ளது என சீன சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று (14) வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த இறக்குமதி மற்றும்மேலும் படிக்க...
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை (13) கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடல்களை அந்தந்த சொந்த மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துமேலும் படிக்க...
மனைவியின் கைபேசித் தாக்குதலால் கணவர் மரணம்?

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த மனைவி, தனது கணவரின் தலையில் கைபேசியால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார்.மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சிறை உத்தியோகத்தர் மீது விளக்கமறியல் கைதி தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போதுமேலும் படிக்க...
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள் வலைகள் அழிவடைந்தன. அரசாங்கம் அவற்றிற்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் டித்வாமேலும் படிக்க...
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய சாலையில் மருத்துவ வசதியுடன் கூடிய விடுதி திறப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால் சுமார் 03 கோடி ரூபாய் நிதியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதியின் ஒரு பகுதியைமேலும் படிக்க...
தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம் , தமிழ்மேலும் படிக்க...

