Day: April 19, 2024
தி.மு.க, அ.தி.மு.க பணம் கொடுத்தது பற்றி புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை: வானதி சீனிவாசன்
பா.ஜ.க குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும். கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பா.ஜ.க.விற்கு கிடைக்கும். தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகமேலும் படிக்க...
பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் – இஸ்ரேலில் உள்ள தனது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள்
இஸ்ரேலில் உள்ள தனதுஅனைத்து பிரஜைகளையும் உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளியேறுவது பாதுகாப்பான விடயம் என்றால் உடனடியாக வெளியேறுங்கள் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராகவும் இஸ்ரேலின் நலன்கள் மீதும் பதிலடி தாக்குதல்கள் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறும் ஆபத்துமேலும் படிக்க...
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இஸ்பஹான் நகரில்மேலும் படிக்க...
இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்
இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெறவிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும். உலகின் மிகப் பெரிய தேர்தல்களில்மேலும் படிக்க...
நாட்டில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!
விசேட மற்றும் சிறுவர்களுக்கான டாக்டர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் வெளிநாடுகளில் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக சென்ற சில வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி : ஆய்விற்கு இலங்கை விஞ்ஞானி
செவ்வாய் கிரகத்தில் நிலவும் சூழலை நகல் எடுத்தது போலவே வாழ்விடத்தை உருவாக்கி, அதில் செவ்வாய்க்கு செல்ல விரும்பும் மனிதர்களை தங்க வைத்து நாசா சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சி ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க...
அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள்! – வஜிர அபேவர்தன
அநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த,மேலும் படிக்க...
என்மீது தாக்குதல் மேற் கொண்டவரை மன்னித்து விட்டேன் – கத்திக் குத்திற்கு இலக்கான அவுஸ்திரேலிய மதகுரு
சிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம் – இயேசுவை போல நடந்துகொள்ளுங்கள் என ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளார். தனது வேகமாகமேலும் படிக்க...