Day: June 5, 2021
இலங்கையின் கொரோனா பாதிப்பு 200,000ஐ கடந்தது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் இன்று மேலும் இரண்டாயிரத்து 280 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால்மேலும் படிக்க...
14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு!
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார்.மேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிப்பு – புதிய அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி,மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து குறித்தமேலும் படிக்க...
தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை!
கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான நிறுவங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தேமியமேலும் படிக்க...
போலித் தமிழ் தேசிய வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவை – டக்ளஸ்
போலித் தமிழ் தேசியவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகவே இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை), கற்கோவளம் பகுதியில் இடிந்த நிலையில் காணப்பட்ட பாலத்தினை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அமைச்சர் டக்ளஸ்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஐயாத்துரை சுரேஷ்குமார் என்பவரே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கானமேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – அத்தநைஸ் (Athénaïs) அஜிர்த்தன் (05/06/2021)
தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்சில் (Serris) வசிக்கும் அஜிர்த்தன் எலிசா (Elisa) தம்பதிகளின் செல்வப்புதல்வி அத்தநைஸ் (Athénaïs) தனது முதலாவது பிறந்தநாளை 5ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறார். இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும்மேலும் படிக்க...